தாவோ தத்துவச் சிந்தனையாளர். சுவாங் ட்ஸு உலகளாவிய சிந்தனை செல்வாக்கு பெற்றவர் அவர்
தமக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோதும் அதை துச்சமென் தூக்கி எறிந்த மகான் அவர்
அலங்கரிக்கப்பட்டுப் பலிபீடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு காளையாக இருப்பதை விட
சேற்றில் புரளும் பன்றியாக இருப்பதே மேல் என்று சொன்னவர் அவர்
அவருடைய மனைவி காலமானார்
துக்கம் விசாரிக்கவும் ஆறுதல் கூறவும் பலர் அவர் வீட்டிற்கு வந்தார்கள்
அப்போது அவர் தாளமிட்டு பாடிக்கொண்டுஇருந்தார்
மனைவி இறந்தபோது இப்படியும் ஒருத்தர் பாடிக்கொண்டு இருப்பாரா
என அதிசயத்தனர்
அதற்கு அவர் சொன்ன பதில்
என் மனைவி பிறப்பதற்கு முன் அவளுக்கு உயிரும் இல்லை உடலும் இல்லை பிறகு அவளுக்கு உயிரும் உடலும் வந்தது இப்போது அந்த உயிரும் உடலும் போய்விட்டது.
இளவேனில் இலையுதிர் பனிகாலம் என காலங்கள் மாறுவது போல் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவது தான் வாழ்கை இதற்காய் வருத்தபடுவேனா என்றார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment