பூக்கள் கனிகளாகும் காட்டில்
குழந்தைகளின் அழிகிய சடலங்கள்
உதடுகளில் குருதி வழிய
ஓங்கி ஒலிக்கிறது சாத்தானின் குரல்
புத்தம் சரணம் கச்சாமி
தமிழனின் விழிகளை
தோண்டியெடுத்த அதன் குரூரம்
தரையிலிட்டு நசுக்கியது
கர்ப்பிணியின் வயிறு கிழித்து
சிசுக்களை குதறின் கூர் நகங்கள்
பல்லாயிரம் உயிர்களை
பலி கொண்டும் அடங்காப் பெரும்பசி
தமிழனின் கடைசித்துளி தேடி அலைகிறது
தமிழ் மந்திரம் ஓதும்
போலிப்பூசாரிகள்
ஓட்டு வேட்டையாடி
உடுக்கை அடித்த ஒலியில்
புறப்பட்ட பொய்கடவுள்கள்
சாத்தானுடன் விருந்துண்டு திரும்பினர்
நாதியற்றவன் கண்ணீர்
தீயாய் மாறி சுட்டெரிக்கும்
சாத்தனை ஏவியவன்
சாத்தானால் சாவான்
துணை போனாவனும்
துடித்து மாள்வான்
தேடும் கண்களுக்கு
தெரியாமல் இருந்தாலும்
கடைசி வெற்றி கடவுளுக்கே!!!
ஜீ.வி யில் வெளியாகியுள்ள
அண்ணாமலை அவர்களின் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment