Monday, May 4, 2009

முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

ஈழ தமிழர் பிரச்சனையில் மட்டும் தயவு செய்து நாடகங்களை நிறுத்தி விட்டு உணர்வு பூர்வமாக எதேனும் செய்ய இயலுமா என்று பாருங்கள்,

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எதையாவது செய்வோம் என்ற மலிவான அரசியலை இதில் புகுத்துவதை நிறுத்திவிட்டு ஈழ தமிழனை காக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்யமுடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுவிடுங்கள்,


நாளையே ப்ரனாப் முக்கர்ஜி ராஜபக்சேவை நல்லிரவில் சந்தித்து விட்டு வந்தால், தயவு செய்து இது என் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றிதான் என்று சொல்லி மக்கள் காதில் பூ இல்லை..இல்லை.. மாலையை சுற்றாதீர்கள், அவர் எதற்காக அங்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,


அறிவுரை சொல்லவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ எங்களுக்கு வயதில்லை அதனால் நாங்கள் வணங்கி கேட்டுகொள்வதெல்லம் "பதவியை விட பெயர்தான்தான் முக்கியம்" இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகும் காமராஜர்,கக்கன் போன்றோர்களின் பெயர்கள் நிலைத்திருக்கும்,அவர்களைபோல் இல்லை என்றாலும் பரவாயில்லை ஹிட்லர்,நீரோ போன்றவர்களின் பெயர்வரிசைக்கு சென்றுவிடாதீர்கள் என்பதுதான் நம் மக்களின் விருப்பம்,


மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,தனி ஈழம் தான் தீர்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதை முனெடுத்து சொல்லாமல் பேசிகொண்டேயிருப்பது தேவையற்றது, ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்கள் உங்கள் பங்குக்கு தேர்தலுக்காகவாவது ஏதாவது அதிரடியாக சொல்லவில்லை என்றால் நீங்கள் வெத்துவேட்டு என்ற எதிர்கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் வாய்ப்பு உள்ளது,

4 comments:

  1. //மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,//

    கரெக்ட்ங்க...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்... நாந்தான் மொத மொதல்ல உங்க கடய தொரந்து வெச்சுருக்கேனா ???

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. http://kadaikutti.blogspot.com/

    நம்ம கட பக்கமும் வாங்க,, :-)

    ReplyDelete
  4. நிறைய எழுதுங்க, படிக்க காத்திருக்கோம்

    ReplyDelete